திமுக தலைவரான பின் முதல் முறையாக கருணாநிதி சமாதி செல்லும் ஸ்டாலின்... புது பொலிவுடன் ஜொலிக்கும் நினைவிடம்!

By vinoth kumarFirst Published Aug 28, 2018, 1:22 PM IST
Highlights

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதி புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. கருணாநிதியின் சமாதி மூக்கு கண்ணாடி, பேனா மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதி புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. கருணாநிதியின் சமாதி மூக்கு கண்ணாடி, பேனா மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். பிறகு அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மறைந்த திமுக தலைவரின் சமாதிக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அவரது சமாதி தினந்தோறும் பூக்கள் மற்றும் பழங்களால் பல்வேறு வகையில் அலங்கரிக்கப்பட்டுகிறது. 

இன்று திமுகவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுக்குழு நிறைவு பெற்ற பிறகு கருணாதியின் சமாதிக்கு ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் கருணாநிதி சமாதியில் மூக்கு கண்ணாடி,பேனா மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!