வரும் 24ம் தேதி திமுக நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கூட்டம்... அறிவித்தார் துரைமுருகன்!!

By Narendran S  |  First Published Dec 22, 2022, 12:07 AM IST

திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 


திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சமீபத்தில் திமுகவில் புதிய நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பல அணிகள் இருப்பதால் அதில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி எடப்பாடி தான்.. ஓங்கி அடித்த ஓபிஎஸ் !!

Latest Videos

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

இதையும் படிங்க: From the India Gate: 2024ல் வாரிசு தான் தலைமையே.. டெல்லிக்கு ரூட் போட்ட கார் கட்சி !!

அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அணிகளை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து புதிய நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகள் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!