திமுக உயர் பொறுப்பில் அமர்ந்த முதல் "வன்னியர்"! 80 வயதில் சாதனைப் படைத்த துரைமுருகன்

Published : Aug 28, 2018, 12:11 PM ISTUpdated : Sep 09, 2018, 08:21 PM IST
திமுக உயர் பொறுப்பில் அமர்ந்த முதல் "வன்னியர்"! 80 வயதில் சாதனைப் படைத்த துரைமுருகன்

சுருக்கம்

1960 களில் திராவிட முன்னேற்றக் கழகம் முதலியார்கள் கட்சி என அழைக்கப்படுவதுண்டு,  அந்த அளவிற்கு அந்த சமூகத்தினரின் ஆதிக்கம் அப்போது இருந்தது, கட்சியின் பொதுசெயலாளர் சி.என் அண்ணாதுரை, துணை நிறுவனர்களின் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன், வி நடராஜன், பேராசிரியர் அன்பழகன், வேலூர் ம.ப.சாரதி என பெரும்பாலானோர் அந்த  சமுகத்தைச் சார்ந்தவர்களே முதன்மயானவர்களாக  இருந்தனர்.

1960 களில் திராவிட முன்னேற்றக் கழகம் முதலியார்கள் கட்சி என அழைக்கப்படுவதுண்டு,  அந்த அளவிற்கு அந்த சமூகத்தினரின் ஆதிக்கம் அப்போது இருந்தது, கட்சியின் பொதுசெயலாளர் சி.என் அண்ணாதுரை, துணை நிறுவனர்களின் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன், வி நடராஜன், பேராசிரியர் அன்பழகன், வேலூர் ம.ப.சாரதி என பெரும்பாலானோர் அந்த சமுகத்தைச் சார்ந்தவர்களே முதன்மையானவர்களாக  இருந்தனர்.

இந்த சூழ்நிலையில், தான் காட்பாடியை அடுத்த காங்குப்பத்தைச் சேர்ந்த துரைமுருகன் இளைஞர்  கட்சியில்  பயணிக்கத் தொடங்கினார். வன்னியர் சமுதாயத்தைப் பொறுத்தவரை திமுக ஆரம்பித்த நாள் முதல் நாள் முதல் டாக்டர். ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பிக்கும் வரை சுமார் 80 சதவிகித வன்னியர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவின் ஆதரவாளர்கள் அல்லது தொண்டர்களாக இருந்தனர்கள் என்றால் அது மிகையல்ல,  அந்த அளவிற்கு அந்த சமுதாயம் திமுகவோடு பின்னிப்பிணைந்த  சமுதாயமாக இருந்தது. 

இதில் இந்த சமுதாயத்திலிருந்து வந்து  மாநில அளவில் அரசியல் செய்தவர் துரைமுருகன் மட்டுமே, இது தவிர சேலம் மாவட்டத்தின் அசைக்க முதியாத சக்தியாக வீரபாண்டி ஆறுமுகம் கோலோச்சினார் என்பது தனிக்கதை, கருணாநிதியின் விசுவாசியான ஆறுமுகம் கட்சித் தலைமையிடம் பவர்புல்லாக இருந்ததோடு ஸ்டாலினுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார். 

வீரபாண்டி ஆறுமுகம் பொறுத்தவரை மாவட்ட செயலாளராகவும் மாநில அளவில் சில பொறுப்புகளில் இருந்தாரே தவிர டாப் 5 பதவிக்கு வர முடியவில்லை, இதேபோன்று MRK பன்னீர்செல்வம் தவிர அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களாக மட்டுமே இருந்தனர். 

2௦௦௦ - ஆம் ஆண்டுக்குப் பிறகுதான், ஜகத்ரட்சகனும் அதிமுக MGR கழகம் என இருந்துவிட்டு திமுகவில் இணைந்தார்.   மத்திய அமைச்சர், செயற்குழுவில் உறுப்பினராக பதவி வகித்தாரே தவிர மிகப்பெரிய பொறுப்புகளில் அமரவில்லை. 1960 களில் திமுக பொருளாளராக  MGRம் அந்தந பின்னர் சாதிக் பாட்சா, ஆற்காடு வீராசாமி, மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் அந்தப் பதவியில் இருந்தனர்.

கருணாநிதியின் மறைவிற்க்கு பிறகு  திருவண்ணாமலை  எ.வ.வேலு  விழுப்புரம் பொன்முடி, பெரம்பலூர் அ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்  இந்தப் பதவிக்கு முட்டி மோதினர். இவர்களின் கனவுகளை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டு துரைமுருகன் தனது அரசியல் சாதூர்யத்தால், எந்தவித சலசலப்புமின்றி தி.மு.க எனும் மிகப் பெரிய கட்சிக்கு பொருளாளராகி  இருக்கிறார். 

70 ஆண்டுகால திமுக வரலாற்றில், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த துரைமுருகன் டாப் 3 பதவியில் அமர்ந்து புதிய சாதனைபடைத்துள்ளார் எனச் சொல்லலாம்.  துரைமுருகனின்  இந்தப் பதவியின் மூலம் திமுகவிற்கு வன்னிய சமுதாயத்தின் ஆதரவு மேலும் கூடுமென திமுக முன்னணி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!