திமுக பொதுக்குழுவில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்!

By vinoth kumarFirst Published Aug 28, 2018, 11:39 AM IST
Highlights

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு கூட்டத்தில் க. அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஐ.பெரியசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு கூட்டத்தில் க. அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஐ.பெரியசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் திமுக முன்னோடிகள் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை டிகேஎஸ் இளங்கோவன் வாசித்தார். இதன்பிறகு கருணாநிதி மறைவு கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தி.மு.க. பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

 

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கும், கேரள வெள்ளத்தில் பலியானவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தை பொன்.முத்துராமலிங்கம் முன்மொழிந்தார். 

click me!