திரௌபதிக்காக பொங்கிய சமூக நீதி காவலர்கள் முன்னே வரவும்: மாறன் பேச்சுக்கு நாக்கை பிடுங்குவதுபோல் கேட்ட மோகன்

By Ezhilarasan BabuFirst Published May 15, 2020, 6:01 PM IST
Highlights

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் காலில் வெந்நீர்  ஊற்றியவர்கள்  போல கொந்தளிக்கும்  சமூக ஆர்வலர்கள் அந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்  நேற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுவெளியில் பட்டியல் இன சமூகத்தை அவமரியாதை செய்யும் வகையில் பேசியிருக்கும் நிலையில் எல்லோரும்  எங்கே போனீர்கள்.?

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மாறனின் பேச்சை மேற்கோள் காட்டியுள்ள திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி , தான் எடுத்த  ஒரு திரைப்படத்திற்காக   நான் ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தி விட்டதாக கூறி என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்க  முயற்சி செய்த சமூக நீதி காவலர்கள் எல்லாம் இப்போது எங்கே போனீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் .  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதி மாறன் டி.ஆர் பாலு ஆகியோர் திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின்கீழ் பெறப்பட்டு மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார் .  அந்த மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்த அவர்கள் ,  செய்தியாளர்களை சந்தித்தனர் ,  அங்கு பேசிய தயாநிதி மாறன் ,  தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம்தர மக்களைப்போல நடத்தினார்  நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறி ஆதங்கப்பட்டார் . 

மாறனின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களை மட்டுமல்ல தொலைக்காட்சியில் அவரின் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்தது  தயாநிதி மாறனின்  இந்த பேச்சு உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதிவெறி எண்ணம் அவரது ஆழ்மனதில் ஊன்றி இருப்பதையே காட்டுவதாக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர் . அவரின் பேச்சு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது .  இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,   தமிழ்நாடு பாஜக ,  திரைப்பட இயக்குனர் ரஞ்சித்  உள்ளிட்டோர் மாறனின் பேச்சை கடுமையாக கண்டித்துள்ளனர் .  இந்நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் திரௌபதி திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி,   சமூக நீதி என்ற  பெயரில்  முற்போக்குவாதிகள் என உலா வருபவர்கள்  இப்போது  மாறன் விவகாரத்தில் எங்கே போனார்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் . 

இது குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறியிருப்பதாவது :-  கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி திரௌபதி திரைப்படம் ரிலீஸ் ஆனதை அனைவரும் அறிவோம்,   ராயபுரம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்த ஒரு குற்றச்  சம்பவத்தை அடிப்படையாக வைத்து நான் அந்தப் படத்தை இயக்கினேன்,  அது தொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு அந்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த படம் உருவாக்கப்பட்டது என நான் பலமுறை சொல்லி இருக்கிறேன் .  ஆனாலும்கூட பலர்  என்னை ,  நீ பொய் சொல்லி இருக்கிறாய் ,  ஒரு சமூகத்தையே தவறாக சித்தரித்து இருக்கிறாய் என சமூக நீதியாளர்கள் என்ற பெயரிலும் முற்போக்காளர்கள் என்ற பெயரிலும்  பலர் என்னை சுற்றி சுற்றி கேள்வி எழுப்பினர் . நான் பலமுறை இல்லையென மறுத்தும் ,  என்னை அவமானப் படுத்தும் நோக்குடன் என் மீது  கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர் . தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் காலில் வெந்நீர்  ஊற்றியவர்கள்  போல கொந்தளிக்கும்  சமூக ஆர்வலர்கள் அந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்  நேற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுவெளியில் பட்டியல் இன சமூகத்தை அவமரியாதை செய்யும் வகையில் பேசியிருக்கும் நிலையில் எல்லோரும்  எங்கே போனீர்கள்.? 

இதுதான் உங்கள் சமூக நீதியா.?  இதே வார்த்தையை மற்ற சமூகத்தினர் யாராவது பேசி இருந்தால் இவ்வளவு அமைதியாக இருந்திருப்பீர்களா இவ்வளவு மென்மையான போக்கை கடைப்பிடித்திருப்பீர்களா அதற்குள் எத்தனை ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும் , எப்படி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியிருக்கும் ,  தற்போது மாறன் விவகாரத்தில் மட்டும்  அமைதியாக இருப்பது எந்த வகையில் நியாயம்.?  இதுதான் கருத்துரிமையை.? சினிமாவில் ஒரு கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கிற சாதாரண பிரச்சினையைதான் நான் காட்டினேன் அதில்  நான் யாரையும் தனிப்பட்ட முறையில் கூட குறிப்பிடவில்லை ,  ஒரு விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு அத்தனை பிரச்சினை  செய்த நீங்கள் இப்போது எங்கே போனீர்கள்.  மக்களே பார்த்துக்கொள்ளுங்கள்... இவர்கள் எல்லாம் இப்படித்தான்.  இவர்களெல்லாம்  ஒரு சார்பு நிலை கொண்டவர்கள் ஒரு தலை பட்சமாக நடந்து  கொள்பவர்கள் .  யார் பேசுகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் இவர்களுடைய  எதிர்ப்புகள் இருக்கும் .  பொத்தாம் பொதுவாக இந்த மக்களுக்காக எந்த  நன்மையும் செய்வதற்கு  எண்ணம் இவர்களிடத்தில் இல்லை .  அப்படி செய்யவும் மாட்டார்கள் .  குறிப்பாக இலக்கியவாதிகள் மனநல மருத்துவர்கள் என இப்போதுவரை திரௌபதிக்கு எதிராக பேசுபவர்கள் இப்போது மாறன் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் . 
 

click me!