திராவிட மாடல், இதுதான் சமூக நீதி மாடல்.. ஜெயலலிதா, கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின்..

Published : May 07, 2022, 09:47 AM ISTUpdated : May 07, 2022, 09:53 AM IST
திராவிட மாடல், இதுதான் சமூக நீதி மாடல்.. ஜெயலலிதா, கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின்..

சுருக்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது, இதேபோல் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழில் படிப்புகளிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்

தமிழகம் மட்டுமல்ல ஏன் தென்னிந்தியா மட்டுமல்ல இந்தியாவிற்கே சமூக நீதி என்ற சித்தாந்தத்தின் வழிகாட்டியாக ஓர் இயக்கும் இருக்கிறதென்றால் அது திராவிட இயக்கமாக தான் இருக்கும். அதிலும் குறிப்பாக இன்றளவும் சமூகநீதியை தூக்கிப் பிடிப்பதில் உறுதியாக நின்று களமாடி வரும் இயக்கமாக அரசியல் சக்தியாக திமுக இருந்து வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் இல்லாதார் நிலை மாற வேண்டும் என்றதே சமூக நீதி, சாதிய இழிவை துடைத்தெறிய பயன்படுத்தப்படும் பேராயுதம்தான் சமூக நீதி, சமூகத்தில் உள்ள எல்லா சிக்கல்களுக்கும் இட ஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும்தான் ஒரே தீர்வு என திராவிட இயக்கம் கண்டுபிடித்த அறுபுதமான மந்திரகோல்தான் சமூக நீதி என்றே சொல்லலாம். இந்த வரலாறு நீண்ட நெடியது, நீதிக்கட்சி தொடங்கி திமுக-அதிமுக வரை சமூகநீதி வரலாறு நீள்கிறது. அதிலும் திமுக மாநில உரிமை சமூகநீதியில் இன்றளவும் வழுவாது களமாடி வருகிறது. அதற்கு பல உதாரணங்களை கூறமுடியும்,

திமுக சமூக நீதி வரலாறு:-

பெண்களுக்கு சொத்துரிமை தொடங்கி அரசு பேருந்தில் இலவச பயணம் வரை திமுகவின் சமூகநீதி தொடர்கிறது. அனைத்து சமூகத்தவருக்குமான இட ஒதுக்கீட்டை 1921 நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது, இந்த  இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையான போராட்டம் நடத்தி 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்ட திருத்தம் செய்ய வைத்தவர்கள் பெரியார், அண்ணா, காமராஜர் ஆவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவீத இட ஒதுக்கீடு 31 சதவீதமாக உயர்த்தியது திமுக ஆட்சியில் தான்,  பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியதும் திமுகதான், அந்தப் 18 சதவீதத்தில் பழங்குடியினருக்கு 1 சதவீதம் தனியாக வழங்கி 18 சதவீதமும் பட்டியலினத்தவருக்கே கிடைக்க வழி செய்ததும் திமுகதான்.

மதம் மாறிய ஆதிதிராவிடர்  கிறிஸ்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் திமுகதான், மிகவும் பிற்படுத்தப்பட்ட 107 சாதியினருக்கு தனியாக 20% இட ஒதுக்கீட்டை பிரித்து மிகப் பிற்படுத்தப்பட்டோர் என பெயரிட்டு தனி ஒதுக்கீடு வழங்கியதும் திமுகதான், அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற சட்டங்கள் திமுகவால் உருவாக்கப்பட்டவை ஆகும். இன்னும் பல ஏராளமான சமூக நீதி சட்டங்களும் திட்டங்களும் திமுக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூகநீதி கண்காணிப்புக்குழு:-

தமிழகம் என்பது சமூக நீதிமன் சமூகநீதி பேசிய 60 ஆண்டுகளாக திராவிட இயக்க ஆட்சி வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், சமூகநீதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சமூகநீதி அளவுகோள் சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக சமூகநீதி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, நியமனங்கள், ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோள் முறையாக  பின்பற்றப்படுகின்றனவா என்பதை இக் குழு கண்காணிக்கவும், அது தவறும் பட்சத்தில் வழி காட்டவும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமூகநீதியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. 

ஆதிதிராவிடர் மக்களுக்கான ஆணையம்:-

இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி  ஆணையம் அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பொறுப்பாளர்களையும் அவர் நியமித்துள்ளார். சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலதிட்டங்களை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் மாநில அளவில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களது முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையே சமூகத்தின் விடுதலை என்ற நோக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். 

நீட் தேர்வில் இருந்து விலக்கு:-

நீட் தேர்வு ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கிறது என்றும், நீட் தேர்வால் இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது, அதேபோல் இத்தேர்வால் தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலைக்கு ஆளாகின்றனர் என்பன உள்ளிட்ட  சமூகக் காரணங்களை கருத்தில் கொண்டு, இந்தத் தேர்வு சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும், சமத்துவத்துக்கும் எதிரானதாக உள்ளது என ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் இரு முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானம் தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் முடிவுக்காக காத்திருக்கிறது. எழை எளிய கிரமப்புற மாணவர்களின் நலனில் அக்கறையில் கொண்டு ஸ்டாலின் தலைமையிலான உறுதியாக நின்று அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கை சமூக நீதி நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு:-

கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது, இதேபோல் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழில் படிப்புகளிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு. அதன் எண்ணிக்கைநை அதிகரிக்க, அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் படிப்புகளில் சேரும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஸ்டாலின் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. ஆனால் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது, அது குறித்து வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.6 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசு போட்ட தீர்மானம் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இது  ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்:-

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பிராமணர்களைத் தவிர வேறு எந்த சாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலை இருந்து வந்தது. இந்த உரிமை அனைத்து சாதியினருக்கும் கிடைக்க வேண்டும்,  சாதியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டுமென பெரியார் கனவு கண்டார். இது என் நெஞ்சில் தைத்துள்ள முள் என கூறிய பெரியார், தனது ஆசை நிறைவேறாமலேயே அவர் மறைந்து போனார். கருணாநிதி அரசு அதை நிறைவேற்ற முயன்றபோது பிராமணர்கள் அதை சட்டரீதியாக முடக்கினர். இந்நிலையில் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சி அமைந்துள்ள நிலையில்  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முறையாக பயிற்சி பெற்ற பிற சாதி அர்ச்சகர்களையும் நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன் மூலம் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி முதல்வர் என ஸ்டாலினை பலரும் பாராட்டி வருகின்றனர். இது திமுகவின் சமூகநீதி நடவடிக்கையின் உச்சமாக பார்க்கப்படுகிறது. 

மகளீர்- திருநங்களைகள் பேருந்தில் இளவச பயணம்:- 

இதேபோல் பெண் விடுதலையை தனது கொள்கைகளில் ஒன்றாக வைத்து திராவிட இயக்கும் செயலாற்று வருகிறது அந்த வகையில் பெண்களுக்கான ஏராளமான சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்கி வந்தாலும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மகளீர், திருநங்களைகளுக்கு பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என ஆணை வழங்கியுள்ளார் இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பிட தக்கது, ஆட்சிப் பெறுப்பேற்று ஓராண்டில் மேற்கண்ட சமூகநீதி திட்டங்களை செயலாற்றி திராவிம மாடல் சமூக நீதி மாடல் என்பதை ஸ்டாலின் நிரூபித்து காட்டியுள்ளார் என்பது எவறும் மறுக்க முடியாது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!