நாளை சென்னை வருகிறார் திரவுபதி முர்மு... ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து சந்திப்பார்களா?

By Narendran SFirst Published Jul 1, 2022, 9:48 PM IST
Highlights

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாளை சென்னை வரும் திரவுபதி முர்முவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாளை சென்னை வரும் திரவுபதி முர்முவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இதை அடுத்து இருவரும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று யஷ்வந்த் சின்கா சென்னை வந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு ஆதரவு திரட்ட நாளை சென்னை வருகிறார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

சென்னை கிண்டியில் உள்ள  தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார். இதற்கு இடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையும் படிங்க: எப்போதும் மு.க. ஸ்டாலினுடன்தான் இருப்பேன்.. படம் போட்டு மெசேஜ் சொன்ன தங்கதமிழ்செல்வன்.!

அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இதன்காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை வரும் திரவுபதி முர்முவை இருவரும் சேர்ந்து சந்திப்பார்களா? அல்லது தனி தனியே சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுக்குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டபோது அனைவருடனும் சேர்ந்து சந்திக்க தயாராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்புடன் இணைந்து சந்திப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

click me!