Congress : மஹாராஷ்டிராவும் போச்சா..சோகத்தில் காங்கிரஸ் - 2024ல் மறுபடியும் பாஜக ?

Published : Jul 01, 2022, 09:23 PM ISTUpdated : Jul 01, 2022, 09:27 PM IST
Congress : மஹாராஷ்டிராவும் போச்சா..சோகத்தில் காங்கிரஸ் - 2024ல் மறுபடியும் பாஜக ?

சுருக்கம்

Congress : மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பம் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே பெரும் தலைவலியை உண்டாக்கி உள்ளது.

மகாராஷ்டிராவில் திருப்பம்

மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகால சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. சிவசேனா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், அடுத்ததாக பாஜக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்கும் உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே கோவா தலைநகர் பனாஜியில் முகாமிட்டுருந்தார். பின்னர் பனாஜியில் இருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏக்நாத் ஷிண்டே பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும் செய்திகளுக்கு.. 750 கோடி முறைகேடு.. சிக்குவாரா செல்லூர் ராஜூ ?அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்

சிவசேனா ஆட்சி கவிழ்ப்பு

இதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் கடிதத்துடன் ஆளுநர் கோஷ்யாரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். பிறகு முதல்வராக பொறுப்பேற்றார் ஏக்நாத் ஷிண்டே. 

ஏற்கனவே காங்கிரஸ் பிஜேபிக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியாமல் திணறுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ச்சியான தேர்தல் பின்னடைவுகளால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் வீழ்ச்சியுடன் மற்றொரு மாநிலத்திலும் ஆட்சியை இழந்துவிட்டது. 

மேலும் செய்திகளுக்கு.. AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

காங்கிரஸ் செய்ய வேண்டியது

இப்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் மட்டும் தனித்தும், கூட்டணியிலும் ஆட்சி செய்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவைச் சந்தித்த பழமையான காங்கிரஸ் கட்சிக்கு இந்த வீழ்ச்சி அதிர்ச்சியாக இருக்கிறது.

2021ஆம் ஆண்டில் கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் மோசமாக தோல்வியடைந்தது, தமிழகத்தில் திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஆட்சியில் பங்குவகிக்கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பம், அதன் மூத்த தலைவர்களின் தொடர்ச்சியான கைவிரிப்பின் மத்தியில் தனது கட்சியினரை ஒன்றாக வைத்திருக்க போராடும் கட்சிக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

அடுத்த ஆண்டு பிற்பகுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கூட காங்கிரஸ் தோல்வியடையாமல் இருக்க உஷாராக இருக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு.. ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வார்.. தீபாவளிக்கு சொல்லமாட்டார்! முதல்வரை சீண்டிய தமிழிசை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!