புதுச்சேரிக்கு வந்தார் திரெளபதி முர்மு - விமான நிலையத்தில் முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.

Published : Jul 02, 2022, 12:22 PM ISTUpdated : Jul 02, 2022, 12:42 PM IST
புதுச்சேரிக்கு வந்தார் திரெளபதி முர்மு - விமான நிலையத்தில் முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.

சுருக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார். அவரை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்றார். 

தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார். அவரை புதுச்சேரி விமான நிலையத்தில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். தற்போது நடச்சதிர விடுதிக்கு வந்துள்ள அவர் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆதரவு கோரவுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நிலையில் பாஜக தனது கூட்டணி கட்சிகளின் சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மேகாலாயா முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் யஸ்வந்த் சிங்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்: ஓவரா ஆட்டம் போடும் KCR..ஓட விடப்போகும் பாஜக... தெலுங்கானாவுக்கு குறி வைத்த மோடி அமித்ஷா..

இந்நிலையில் இரு வேட்பாளர்களும் நாடுமுழுவதும் உள்ள தங்களது ஆதரவு  கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இந்த வகையில் வட மாநிலங்களில் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து அதிமுக முர்மு ஆதரவு கோரினார். அந்தவகையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முன்பு இன்று புதுச்சேரி வருகை தந்துள்ளார்.  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை புதுச்சேரி வந்த  அவரை, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதையும்படியுங்கள்: பிரதமரை மூன்றாவது முறையாக அசிங்கப்படுத்திய முதல்வர்..கொஞ்சம் கூட நாகரிகமில்லாத கேசிஆர்..

அங்கிருந்து ஹோட்டல் ஆக்கார்டுக்கு சென்ற அவர், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். முன்னதாக இந்நிலையில் அவருக்கு ஏராளமான பாஜக தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர், இந்நிலையில் இன்று பிற்பகல் திரௌபதி முர்மு சென்னை வருகை தர உள்ளார். பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆதரவு கேட்க உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் ஆகியோர் அவரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர். 

மேலும் பாஜக கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அவருடனே உரையாடுவதுடன் அவருக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். இந்நிலையில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், தங்கமணி, ஆர். பி உதயகுமார், எஸ்.பி வேலுமணி, காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி அன்பழகன் உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!