’சிறந்த வளர்ந்து வரும் நட்சத்திரம்’... இவரு யாருன்னு தெரிஞ்சா அப்பிடியே ஷாக் ஆயிடுவீங்க

Published : Oct 28, 2018, 12:41 PM IST
’சிறந்த வளர்ந்து வரும் நட்சத்திரம்’... இவரு யாருன்னு தெரிஞ்சா அப்பிடியே ஷாக் ஆயிடுவீங்க

சுருக்கம்

அரசியல்,மருத்துவம், சமூகசேவை, பொதுவாழ்வில் பொறுமை போன்ற பலவகையான தகுதிகளுக்காக தமிழக மக்களின் மனங்கவர்ந்த ஒரு தலைவருக்கு ‘சிறந்த வளர்ந்துவரும் நட்சத்திரம்’ விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தன்முயற்சியில் சற்றும் தளராமல் போராடும் டாக்டர் தமிழிசைதான் அந்த ‘வளர்ந்து வரும்’ நட்சத்திரம் என்பதால் அவரது வலைதள ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின்  பன்னாட்டு கலாசார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம்தான், இந்த ஆண்டிற்கான சர்வதேச வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை தேர்வு செய்துள்ளது.

 கள்ளங்கபடமின்றி இதனை உற்சாகமாக வெளியிட்டுள்ள டாக்டர் தமிழிசை, 'அரசியல்,மருத்துவ,சமூகசேவைகளில் சர்வதேச அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண் தலைவர் என்று சிகாகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8-வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபிறகு,  சிகாகோ, வாஷிங்டன் மற்றும் பாஸ்டன் நகரின் தமிழ்சங்கங்களின் அழைப்பை ஏற்று கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறேன்" என்று அறிவித்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சிகள் முடிந்து நவம்பர் 3ம் தேதியன்றுதான் அவர் சென்னை திரும்புகிறார் என்பதால் மீம்ஸ் கிரியேட்டர்கள் வேறு டாபிக் தேடவும்.
 
PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!