’என்னை ஒழித்துக்கட்ட அமைச்சர்கள் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்’...கதறும் கருணாஸ்

Published : Oct 28, 2018, 12:04 PM IST
’என்னை ஒழித்துக்கட்ட அமைச்சர்கள் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள்’...கதறும் கருணாஸ்

சுருக்கம்

எப்போதும் தன்னைப் பரப்பாகவே வைத்துக்கொண்டிருக்கும் கருணாஸ் ‘கூவத்தூர் ரகசியங்களை வெளியிட்டுவிடுவேனோ என்கிற பயத்தில் அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட கோடி கோடியாக அமைச்சர்கள் பணம் செலவழிக்கின்றனர்  என்று அ.தி.மு.க.வினர் மீது குற்றம் சாட்டுகிறார்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் நேற்று மதுரையில் டிடிவி தினகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்தது.  சந்திப்புக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரது அங்கீகாரம் போதும்.

கள்ளர், மறவர், அகமுடையார் சமூகத்தை ஒன்றாக இணைக்கவே முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை தொடங்கினேன். இதற்கான வாய்ப்பாக சட்டசபையில் நுழைந்தேன். அது நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அ.தி.மு.க. அணி, அணியாகத்தான் உள்ளது. அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை.

சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விளக்க நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீசு வந்தால் அதை நான் சந்திக்க தயார்.

எனக்கு எதிராக செயல்படுவதற்காக பல்வேறு அமைப்பினருக்கும் அ.தி.மு.க.வில் உள்ள பல அமைச்சர்கள் பணம் கொடுத்து தூண்டி விடுகின்றனர். ஆனால் அரசியலை விட்டு என்னை அகற்ற யாராலும் முடியாது’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!