இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரம்: சசிகலா அணி சார்பில் 12,572 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

First Published May 22, 2017, 9:58 PM IST
Highlights
Double leaf logo suspended issue 12572 statutory papers filed on behalf of Sasikala


இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையகத்தில் சசிகலா அணி சார்பில் 2-வது கட்டமாக 12 ஆயிரத்து 572 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. எனவே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

Latest Videos

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையகத்தில் சசிகலா அணி சார்பில் 2-வது கட்டமாக 12,572 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இரட்டை சிலை சின்னத்தை முடக்கிய தலைமை தேர்தல் ஆணையம் ஜூன் 16-ம் தேதிக்குள் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து சசிகலா அணியினர் 2-வது கட்டமாக 12,752 நிர்வாகிகளிடம் பத்திரங்களை பெற்றனர். அதை வழக்கறிஞர் ராகேஷ் சர்மா தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்தார்.

ஏற்கனவே பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட 1,901 பத்திரங்கள் சசிகலா அணி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 30,000 பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!