கொரோனா குறித்து கவலை வேண்டாம்.. தமிழகம் கட்டுப் பாட்டில் உள்ளது.. கெத்துகாட்டிய ராதாகிருஷ்ணன்.

Published : May 05, 2022, 02:36 PM IST
 கொரோனா குறித்து கவலை வேண்டாம்.. தமிழகம் கட்டுப் பாட்டில் உள்ளது.. கெத்துகாட்டிய ராதாகிருஷ்ணன்.

சுருக்கம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது எனவே தேவையற்ற பீதி அல்லது குழப்பங்களுக்கு மக்கள் ஆளாக வேண்டாம் என மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது எனவே தேவையற்ற பீதி அல்லது குழப்பங்களுக்கு மக்கள் ஆளாக வேண்டாம் என மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தேசிய ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு சென்னை தங்க சாலையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு சார்பில் ஆஸ்துமா தொடர்பான கையேட்டினை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் மற்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இன்று தேசிய ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்,  இதேபோல ஒவ்வொரு நோய்க்கான விழிப்புணர்வு தினமும் அவசியம் என்றார். போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தில் நடந்த படுகொலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

போதை பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம் பதிவு செய்து இருக்க வேண்டும், அது குறித்து முதல்கட்ட விசாரணையை நடைபெற்று வருகிறது. அதில் போதை தடுப்பு நிலையம் முழுவதுமாக சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் ஏராளமான போதைத் தடுப்பு மையங்கள் உள்ளன, ஆனால் பொதுமக்கள் அவைகள் அங்கீகரிக்கப்பட்ட மையங்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். பதிவு செய்யப்பட்ட மையமாக இருந்தால் உடனே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது ஐஐடியில் 7300 பேருக்கு மேல் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு முழுவதுமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே  கொரோனா குறித்து தேவையற்ற பீதி வேண்டாம். ஒரு நாளில் 30 என்பதும் 70 ஆக கூட வரலாம், அது குறித்து கவலைப்பட தேவை இல்லை.

ஆனால் அதை நாம் கட்டுப்படுத்தி விட்டோம், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் என்பது நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது, மற்ற மாநிலங்களில் அதிகமாக இருப்பதால் நாம் அதில் கவனமாக இருந்து வருகிறோம். இங்கு யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை, அதனால் முழு கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை தமிழகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், புதிதாக எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளும் நான் வெளியிடவில்லை.  புதிதாக எந்த கட்டுப்பாடுகளையும் நாம் விதிக்கவில்லை தேவையற்ற வீடியோ அல்லது குழப்பங்களுக்கு மக்கள் ஆளாக வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!