தேவையில்லாமல் பேசக்கூடாது... புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2021, 10:19 AM IST
Highlights

பாஜக அரசின் அமைச்சரவை நேற்று முன் தினம் விரிவாக்கப்பட்டது. பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை 36 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். 
 

பாஜக அரசின் அமைச்சரவை நேற்று முன் தினம் விரிவாக்கப்பட்டது. பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை 36 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். 

இந்நிலையில், தங்களது சீனியர் அமைச்சர்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து, அவர்களது அறிவுரையை பெற்று, முழு முனைப்புடன் அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.  

புதிய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைந்து,  தங்கள் திறன் முழுவதையும் பணிகளில் செலுத்துவதோடு, மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதையும் அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என புதிய அமைச்சர்களிடம் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

 

அமைச்சரவை விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலரது இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. மன்சுக் மாண்டவியாவுக்கு சுகாதார அமைச்சகம் மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கிரேன் ரிஜிஜுக்கு சட்ட அமைச்சகத்தின் பொறுப்பும், தர்மேந்திர பிரதானுக்கு கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சக பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை மீன், கால்நடைத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறைகளின் இணை அமைச்சராக நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

click me!