பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்... சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Apr 24, 2021, 10:57 AM IST
Highlights

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். 

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக 2400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் ஏற்படுத்தப்படும். கோவிட் கவனிப்பு மையங்களில் 9503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாக ரெம்டெசிவர் மருந்து வாங்கி போடக்கூடாது. எல்லோருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவைப்படாது. சென்னை அண்ணாநகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலனை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பாதிக்கப்பட்டவர்கள் தானாகவே ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்கிப் போட்டுக்கொள்ளகூடாது. தமிழகத்தில் தற்போது 40% படுக்கைகள் காலியாக உள்ளன.  தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றம் அடையகூடாது. சென்னையில் 12 ஸ்கிரீனிங் செண்டர் உள்ளது. அங்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!