ரூபாய் 4.12 கோடியை வாரிக்குவித்த சென்னை மாநகராட்சி.. மக்களே இனியாவது கவனமாக இருங்கள்..

Published : Apr 24, 2021, 10:42 AM IST
ரூபாய் 4.12 கோடியை வாரிக்குவித்த சென்னை மாநகராட்சி.. மக்களே இனியாவது கவனமாக இருங்கள்..

சுருக்கம்

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் கடைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து  ரூபாய் 4.12 கோடி அபராதத் தொகை வசூலிக்க பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. 

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் கடைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து  ரூபாய் 4.12 கோடி அபராதத் தொகை வசூலிக்க பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு  வழிமுறைகளான முகக் கவசம் அணிதல், 2 மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்போது  கைகளை சோப்பு கரைசல் மட்டும் சானிடைசர் கொண்டு  சுத்தப்படுத்திக் கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வாயிலில் கிருமிநாசினி திரவங்கள் வைத்தல், போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. 

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து 22-4- 2021 அன்று வரை மொத்தம் ரூபாய் 4.12 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல, பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும், இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!