கடன் வாங்கிவிட்டு ஆட்டம் காட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. பள்ளிக் கல்வித்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை..

Published : Apr 24, 2021, 10:15 AM IST
கடன் வாங்கிவிட்டு ஆட்டம் காட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. பள்ளிக் கல்வித்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை..

சுருக்கம்

அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த மறுப்பதாகவும், தொடர்ந்து காலதாமதம் செய்வதாகவும் வந்த புகாரின் பேரில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த மறுத்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அவசர தேவைக்காக கடன் பெற்றுக் கொள்ளும் வகையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களின் கடன் தொகை அவர்களிட் ஒப்புதலுடன் மாதம் மாதம் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த மறுப்பதாகவும், தொடர்ந்து காலதாமதம் செய்வதாகவும் வந்த புகாரின் பேரில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது  வாங்கிய கடனை அரசு பள்ளி ஆசிரியர்கள் திரும்ப செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கூட்டுறவுச் சங்கங்களில் கடன்  பெற்றுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஊதியத்திலிருந்து இனி கடன் தொகை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்துள்ளது. 

கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதுடன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், சம்பள பிடித்தம் செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இதனால் கடன்  பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் காலதாமதம் செய்து வரும்  ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!