அரசு பேனர் வைத்தால் மட்டும் பேனர் கீழே விழாதா..? நீதிமன்றத்தை கிண்டலடிக்கும் கார்த்தி சிதம்பரம்..!

Published : Oct 04, 2019, 06:23 PM IST
அரசு பேனர் வைத்தால் மட்டும் பேனர் கீழே விழாதா..?  நீதிமன்றத்தை கிண்டலடிக்கும் கார்த்தி சிதம்பரம்..!

சுருக்கம்

பேனர் வைக்க அரசு அனுமதி கேட்டதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விசித்திரமானது. அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா? என ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.   

பேனர் வைக்க அரசு அனுமதி கேட்டதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விசித்திரமானது. அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா? என ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்  திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, ’’பேனர் வைக்க அரசு அனுமதி கேட்டதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விசித்திரமானது. அரசு பேனர் வைத்தால் கீழே விழாதா?  எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இப்படி செயல்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு கைது செய்வது வாடிக்கையாகி விட்டது.  பாஜகவை எதிர்ப்பவர்கள் பாஜகவில் சேர்ந்தால் புனிதமாகி விடுவார்கள் என நினைக்கின்றனர்’’ என அவர் தெரிவித்தார். 

பிரதமர் மோடியை வரவேற்று 'பேனர்' வைக்க அ.தி.மு.க. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேநேரத்தில் 'மத்திய, மாநில அரசு பேனர் வைத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்ததை இவ்வாறு விமர்சித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!