டொனேசன் வசூலிக்க தடை! மக்கள் மன்ற பதவிகளை தூக்கி எறியும் ரஜினி ரசிகர்கள்!

By vinoth kumarFirst Published Aug 28, 2018, 2:08 PM IST
Highlights

பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் டொனேசன் வசூலிக்க கூடாது என்கிற தலைமையின் கட்டாய உத்தரவால் பல்வேறு மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களுக்கு பதவிகள் வேண்டாம் என்று தூக்கி எறிந்து வருகின்றனர். அண்மைக்காலமான ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களிடம், வியாபாரிகளிடம் டொனேசன் வசூலிக்க கூடாது என்கிற தலைமையின் கட்டாய உத்தரவால் பல்வேறு மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களுக்கு பதவிகள் வேண்டாம் என்று தூக்கி எறிந்து வருகின்றனர். அண்மைக்காலமான ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். நிர்வாக காரணங்களுக்காக நிர்வாகிகள் மாற்றப்படுவதாக ரஜினி ரசிகர் மன்ற மேலிடம் விளக்கம் அளித்து வருகிறது. உண்மையில் ஒரு சிலர் மட்டுமே சிறப்பாக செயல்படாத காரணத்தினால் நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மற்றபடி பெரும்பாலானவர்கள் அவர்களாகவே முன்வந்து பதவியை வேண்டாம் என்று ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மக்கள் மன்றத்திற்கு என்று கூறி யாரிடமும் டொனேசன் பெறக்கூடாது என்கிற உத்தரவு தான் நிர்வாகிகள் பலரின் ராஜினாமா முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை தொடர்ந்தே ரசிகர் மன்றத்தில் பணம் புழங்க ஆரம்பித்தது. அதிலும் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு பணப்புழக்கம் அதிகமாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரித்த போது தான், நிர்வாகிகள் டொனேசன் என்று கூறி கை நீட்டிய தகவல்கள் ரஜினிக்கு கிடைத்துள்ளது. 

கட்சிக்கு ஆரம்பிப்பதற்கு முன்னரே டொனேசன் என்று ரசிகர்கள் யாரிடமும் கை நீட்டக்கூடாது என்று ரஜினி மேலிட நிர்வாகி சுதாகரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் தொடர்பு கொண்ட சுதாகர், டொனேசன் என்று எங்கும் யாரும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கு சிலர் உடன்பட்டு டொனேசன் வசூலிப்பதை கைவிட்டுள்ளனர். ஆனால் வேறு சில நிர்வாகிகளோ டொனேசன் வசூலிக்காமல் கை காசை செலவு செய்தா மன்றப்பணிகளில் ஈடுபட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஒரு சில நிர்வாகிகள் ஒரு படி மேலே சென்று மன்ற செலவுக்கு என்ன செய்வது என்று கேட்டு தலைமை மன்றத்திற்கு கடிதமே எழுதியுள்ளனர். மேலும் சிலரோ கை காசை செலவு செய்து மன்றப்பணிகளில் இனியும் ஈடுபட முடியாது என்று கூறி பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்தே நிர்வாகிகள் மாற்றத்தில் ரஜினி தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார். 

 இது குறித்து ரஜினியின் மக்கள் மன்ற மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, தற்போதைய சூழலில் நிர்வாகிகள் யாரையும் எதுவும் செலவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளோம். ஆனால் சிலர் ஆர்வக்கோளாறில் செலவு செய்து வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே ஆர்வம் காட்டச் சொல்லியுள்ளோம், ஆனால் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி சில நிர்வாகிகள் வியாபாரிகளிடம் டொனேசன் கேட்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்த டொனேசன் வசூலிக்க கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் முடித்துக் கொண்டார்.

click me!