கார் வேண்டாம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...!! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி சலுகை...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2020, 12:36 PM IST
Highlights

ஆகவே கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயர் அலுவலர்கள் வரிவசூல் பணிகளுக்கு மாநிலத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் 

நாட்டின் வரிவசூல் மணிக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநில உயர் அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி  ஆதித்யாநாத் அதிரடியாக அனுமதி அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதில் இருந்து புதிய புதிய அறிவிப்புகளை செய்து வருகிறார், சில வரவேற்ப பெற்றாலும் பெரும்பாலும் எதிர்ப்பை மக்கள் மத்தியில் அவருக்கு பெற்று தந்துள்ளன.

 

பசுக்களுக்கு பராமரிப்பு இல்லம்,  உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறிக்கு தடை என பல்வேறு அதிரடிகளை அறிவித்து புழுதியைக் கிளப்பி முதலமைச்சர் ஆவார்.தற்போது புதிய அறிவிப்பாக அரசு அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் அளிக்கப்படும் என அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் .  இதுதொடர்பாக சமீபத்தில் வரிவசூல் பிரிவு உயர் அலுவலர்களுடன் நடந்த கூட்டமொன்றில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார் ,  அப்போது பேசிய அவர் மாநிலத்தில் வரிவசூல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தொடர்ச்சியாக அனைத்து வருவாய் ,  நிர்வாக பணிகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும் என்றார் ,  குறிப்பாக , களால் ,  முத்திரைத்தாள் மற்றும் பதிவு துறை முதன்மைச் செயலாளர்கள் மாநிலத்தின் 8 வரி நிர்வாக பிரிவுகளையும் கவனமாக பார்வையிட வேண்டும் என்றார். 

ஆகவே கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயர் அலுவலர்கள் வரிவசூல் பணிகளுக்கு மாநிலத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அப்போது அனுமதி அளித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன .  சர்ச்சைக்கு பெயர் போன முதலமைச்சர் ஆதித்யநாத் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாநில உயர் அதிகாரிகளுக்கு சலுகை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது . 
 

click me!