உள்ளாட்சி ரிசல்ட்... 27 மாவட்டங்களில் திமுக- அதிமுக கைப்பற்றப்போகும் மாவட்டங்களின் லிஸ்ட் இதோ..!

By Thiraviaraj RMFirst Published Jan 3, 2020, 11:58 AM IST
Highlights

14 மாவட்டங்களை திமுகவும், 12 மாவட்டங்களை அதிமுகவும் கைப்பற்ற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. 

27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விட்டன. இன்னும் 6 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறாமல் ஓரிரு இடங்களில் நீடித்து வருகிறது. 

இந்நிலையில்  14 மாவட்டங்களை திமுகவும், 12 மாவட்டங்களை அதிமுகவும் கைப்பற்ற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், சிவகங்கை , ராமநாதபுரம், திருச்சி14 மாவட்டங்களில் திமுக கைப்பற்றுகிறது.

 

கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை அதிமுக கைப்பற்றுகிறது.  
 

click me!