கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்த அட்டூழியத்தை யோசித்து பாருங்கள்...!! மனக்குமுறலில் மோடி...!!

Published : Jan 03, 2020, 11:49 AM IST
கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்த அட்டூழியத்தை யோசித்து பாருங்கள்...!!  மனக்குமுறலில் மோடி...!!

சுருக்கம்

பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த  வேண்டும் என்றார்.   

குடியிருப்புச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பாகிஸ்தான் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல்  எழுப்புங்கள் என எதிர்க் கட்சிகளுக்கு  பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் . பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் 107 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுகிறது இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் சித்தகங்கா மாவட்டத்தில்  உள்ள மறைந்த மடாதிபதி சிவகுமார சுவாமியின் சமாதியில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார் 2020 ஆம் ஆண்டை சித்தகங்கா மடத்தில் இருந்து ஆரம்பிப்பதாக தெரிவித்தார் ,  அப்போது பேசிய அவர் ,  பாகிஸ்தானிலிருந்து வரும் சிறுபான்மையினரை அவர்களின் தலைவிதி எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என விட்டுவிட முடியாது அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது .  ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியாவில் பாராளுமன்றத்திற்கு எதிராக நிற்கின்றனர்.  நீங்கள் கோஷம் எழுப்புவது என்றால் பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக எழுப்புங்கள்.  நாட்டின் பாராளுமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் நீங்கள்,  பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச அளவில் அம்பலப்படுத்த  வேண்டும் என்றார்.

 

போராட்டம் நடத்துபவர்கள்,  கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல்கள் எழுப்புங்கள்,   பாகிஸ்தான் மத அடிப்படையில் உருவாக்கப்பட்டது ,  அந்நாட்டில் உள்ள  மத சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் ,  பாகிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் இந்தியாவுக்குள் அகதிகளாக வருகிறார்கள்,  ஆனால் காங்கிரசும் அவர்களின் கூட்டணி கட்சிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக போராடவில்லை,  அங்கிருந்து வரும் அகதிகளுக்கு எதிராக பேரணி நடத்துகிறார் என காட்டமாக தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!