20 மாவட்டங்களில் முடிந்தது வாக்கு எண்ணிக்கை... அதிமுக -9: திமுக- 10 மாவட்டங்களை கைப்பற்றின..!

By Thiraviaraj RMFirst Published Jan 3, 2020, 11:18 AM IST
Highlights

நடைபெற்ற 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் 20 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முற்றிலுமாக முடிக்கப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 20 தொகுதிகளில் அதிமுக 9 மாவட்டங்களையும், திமுக 10 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. சிவகங்கையை பொறுத்தவரை இரு கட்சிகளுக்கும் 8க்கு 8க்கு இடங்களில் வெற்றிபெற்று இழுபறி நீடிக்கிறது.

 

அதிமுக மாவட்ட கவுன்சிலர் 208 ஒன்றிய கவுன்சிலர் 1657 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாமக 13 மாவட்ட கவுன்சிலர் 113 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்துள்ளது. தேமுதிக 5 மாவட்ட கவுன்சிலர், 87 ஒன்றிய கவுன்சிலர், பாஜக 6 மாவட்ட கவுன்சிலர் 87 ஒன்றிய கவுன்சிலர், திமுக 236 மாவட்ட கவுன்சிலர், 1970 ஒன்றிய கவுன்சிலர், காங்கிரஸ் 10 மாவட்ட கவுன்சிலர் 116 ஒன்றிய கவுன்சிலர், மதிமுக 2 மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர், விசிக 6 ஒன்றிய கவுன்சிலர், இந்திய கம்யூன்பிஸ்டு 6 மாவட்ட கவுன்சிலர், 70 ஒன்றிய கவுன்சிலர், மா.கம்யூனிஸ்டு 2 மாவட்ட கவுன்சிலர் 18 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்துள்ளன.

அதேபோல அமமுக அமமுக ஒரு மாவட்ட கவுன்சிலர், 93 ஒன்றிய கவுன்சிலர் சுயேட்சை 1 மாவட்ட கவுன்சிலர் 436 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பிடித்துள்ளன. 

click me!