
அப்போல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர் ரிச்சர்ட் பேலிடம் கேட்ட போது அவரிடம் வைகோ உங்களை சந்தித்தாரா? அவருக்கு நீங்கள் விசிட்டிங் கார்டு கொடுத்தீர்களா? என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் எழுப்பினார்.
இதைக்கேட்டு அங்குள்ளவர்கள் சிரித்தனர். டாக்டர் ரிச்சர்டும் சிரித்தார். பின்னர் அவர் நான் பலரைஅயும் பார்த்தேன். வைகோஅவையும் பார்த்தேன். அவர் சிகிச்சை பற்றி கேட்டார், விளக்கி கூறினேன். சந்தோஷப்பட்டார். என்னுடை விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்தேன் உண்மைதான் என்று சிரித்தபடியே கூறினார்.