
ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக ஏன் லண்டன் அழைத்து செல்லவில்லை என்ற கேள்விக்கு அவர் வர மறுத்துவிட்டார் என்று டாக்டர் ரிச்சர்டு பரபரப்பாக பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதாவை லண்டன் அழைத்து சென்றிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாமே ஏன் அழைத்து செல்லவில்லை என்ற கேள்விக்கு டாக்டர் ரிச்சர்ட் பேல் பரபரப்பாக பதிலளித்தார். ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது . சிறந்த மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.
அவரை லண்டன் அழைத்து செல்ல நாங்கள் உத்தேசித்தோம். உடல் நிலை தேறிய பின்னர் ஜெயலலிதாவிடம் லண்டன் அழைத்து செல்வது பற்றி கூறினோம். ஆனால் அவர் லண்டன் செல்ல மறுத்துவிட்டார்.
அப்போலோவிலேயே உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை உள்ளதால் நாங்கள் எதையும் சொல்லவில்லை. லண்டன் செல்வது பற்றி ஜெயலலிதா தான் முடிவு செய்தார் என்று டாகடர் பேல் தெரிவித்தார்.