Doctor Roja: திடீரென ஸ்டெதாஸ்கோப்வுடன் தொகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்த ரோஜா. வைரஸ் வீடியோ.

By Ezhilarasan BabuFirst Published Dec 21, 2021, 6:34 PM IST
Highlights

ஒரு முதியவருக்கு ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதித்த அவர், உங்களுக்கு பிபி நார்மல்... சுகர் நார்மல் என்று கூறினார். அன்றாடம் நல்ல உணவை  எடுத்துக்கொள்ளுங்கள், நடைபயிற்சி செய்யுங்கள் என அந்த முதியவருக்கு ஆலோசனை கூறினார். 

ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, நடிகை ரோஜா கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்வுடன் தொகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நகரி தொகுதிக்குட்பட்ட புதூர் பகுதியில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அவர் ஸ்டெதாஸ்கோப் சகிதம் முதியவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதித்து பிபி நார்மல்.. சுகர் நார்மல் என்று அவர் கூறியது அங்கிருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எம்எல்ஏ ரோஜா எப்போது டாக்டரானார் என அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. 

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் நடிகை ரோஜா.  நாட்டிலேயே முதல்முறையாக  ஆந்திர மாநிலத்தில்தான் ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவராக நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான ரோஜா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டது. அதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் கட்சியில் அதே முழு ஈடுபாட்டுடன் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

ரோஜா அரசியல் தலைவர், கதாநாயகி, இல்லத்தரசி, தொலைக்காட்சி தொகுப்பாளர், பள்ளி ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் அவர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் புதூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்எல்ஏ ரோஜா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தனியார் மருத்துவமனையின் சார்பில் அந்தப் பகுதியில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த பொது மக்களுக்கு அவர் ஸ்டெதாஸ்கோப் வைத்து அவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும்  சர்க்கரை அளவு போன்றவற்றை பரிசோதித்தார். அவரின் நடவடிக்கை ஒரு கை தேர்ந்த மருத்துவரைப் போலவே இருந்தது. அப்போது பலரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். எம்எல்ஏவாக இருந்த ரோஜா  எப்போது மருத்துவரானார் என்று பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

அப்போது ஒரு முதியவருக்கு ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதித்த அவர், உங்களுக்கு பிபி நார்மல்... சுகர் நார்மல் என்று கூறினார். அன்றாடம் நல்ல உணவை  எடுத்துக்கொள்ளுங்கள், நடைபயிற்சி செய்யுங்கள் என அந்த முதியவருக்கு ஆலோசனை கூறினார். அவரின் பேச்சை கேட்டு அங்கிருந்த பலரும் ஆச்சரியத்தில் அவரை பாராட்டினர். சமீபத்தில் அவர் ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தபோது மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து அசத்தினார். ஏதோ எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு அவர் பாடம் எடுக்கவில்லை, அவர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார், அதுவும் பலருக்கும் புரியும் வகையில் அவர் பாடம் நடத்தி ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் மாணவர்களுடன் மாணவர்களாக விளையாட்டு வீராங்கனையாகவும் களமிறங்கிவருகிறார். கைப்பந்து, ஷட்டில்லாக், கபடி என அனைத்து விளையாட்டுகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். வெறும் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் நிஜமாகவே கொஞ்ச நேரம் விளையாடி பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

"

இந்நிலையில்தான் அவர் மருத்துவரைப்போல செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஜா, இளம் வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்று தனக்கு கனவு இருந்தது என்றும், ஆனால் தனது வீட்டில் ஏர்ரோஸ்டர்ராக வேண்டும் என்று விரும்பியதாகவும், பின்னர் கல்லூரி மாணவியாக தேர்ச்சி பெற்று அதற்காக நுழைவுத்தேர்வு எழுதியதாகவும் அவர் கூறினார். ஆனால் அதற்குள் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்ததாகவும், பின்னர் முழுநேரமாக சினிமாவுக்கே வந்து விட்டதாகவும், தனது நீண்ட நாள் மருத்துவர் கனவு இன்று நிறைவேறிவிட்டது என்றும் அவர் வேடிக்கையாகக் கூறினார். பலரும் அவரது பேச்சுக்கு கை தட்டி ஆரவாரம் செய்தனர்.  
 

click me!