தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் ஜமீலா!

Published : Feb 11, 2019, 01:30 PM ISTUpdated : Feb 11, 2019, 01:35 PM IST
தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் ஜமீலா!

சுருக்கம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் செய்தி தொடர்பாளராக இருந்த ஜமிலா, தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். 

சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணியில் செயல்பட்டு வந்த ஜெமீலா மற்றும் பல முக்கியஸ்தர்கள் சமீபத்தில்தான் சரத்குமாரின் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.  

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்த டாக்டர் ஜமீலா,  சமூகத்துக்குப் பயன்படும் கட்சியாக இல்லை. அங்கே எனக்கு எதிராகச் சில சதிகள் நடப்பதும் தெரிந்தது. கட்சியின் பெயரில் மட்டும்தான் சமத்துவம் இருக்கிறது என்று தெரிந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகி பி.ஜே.பி-யில் சேர்ந்தேன்.

மக்களுக்குத் தேவைப்படுகிற அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த தேசியக் கட்சியான பி.ஜே.பி-யில்தான் வாய்ப்புள்ளது. பெண் வேட்பாளர் என்றாலும்கூட சமத்துவம் அறிந்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியில் இருந்தபோது கிடைக்காத அங்கீகாரம், இங்கு சேர்ந்த சில மாதங்களிலேயே எனக்குக் கிடைத்தது. பெண் தலைவர்களை அதிகம்கொண்ட கட்சி பி.ஜே.பி என்று சொல்லலாம். அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவைவிட கட்சிக்குள் மரியாதை அதிகமாக இருக்கிறது. சமத்துவத்தைப் பரப்ப நினைக்கும் என்னைப் போன்ற போராளிகளுக்கு ஒரு நல்ல இடமாக பி.ஜே.பி இருக்கிறது என சொல்லி வந்த டாக்டர் ஜமீலா நேற்று கடந்த 2017 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் “பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை” என்று கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

கடந்த ஒரு ஆண்டுகளாக எந்த காட்சியிலும் இணையாமல் இருந்த டாக்டர் ஜமீலா இன்று  தனது ஆதரவாளர்களுடன் 
 தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!