’இப்போ குடும்பத்திற்கு ரூ.2000, அடுத்து 3000... ஹாட்ரிக் அடிக்கத் தயாராகும் எடப்பாடி..’ எம்.ஜி.ஆர்- ஜெ.,வை விட தாராளம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 11, 2019, 1:29 PM IST
Highlights

அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்த முறையும் அதிரடி முடிவை வெளியிட்டு ஹாட்ரிக் அடிக்கப்போவது உறுதி என அதிமுக அமைப்புச் செயலாலர் செம்மலை தெரிவித்துள்ளார். 
 

அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்த முறையும் அதிரடி முடிவை வெளியிட்டு ஹாட்ரிக் அடிக்கப்போவது உறுதி என அதிமுக அமைப்புச் செயலாலர் செம்மலை தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாயை ரேஷன் கார்டுகளுக்கு வழங்கி அசத்தினார்  எடப்பாடி பழனிசாமி. இப்போது சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவவசாயிகள், நகர்ப்புற ஏழைகள்,  பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி, விசைத்தறி, கைத்தறி உப்பள தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை தொழிலாளர்கள் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ஆயிரம் நிதி வழங்கப்படும். கிராமப் பகுதிகளில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்புறங்களில் வாழும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் இதற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதுகுறித்து அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை கூறுகையில், ’’முதலில் 1000 ரூபாய் வழங்கி முதல் சிக்சர் அடித்தார். இப்போது 2000 ரூபாய் வழங்கி 2வது சிக்சர் அடித்துள்ளார். அடுத்தும் இதுபோன்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி ஹாட்ரிக் சிக்சர் அடிக்கப்போவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஏழைகளுக்கு நிதி உதவி செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி என எதிர் கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஹாட்ரிக் அடிப்பார் என அக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளியான செம்மலை கூறியிருப்பது அடுத்த அறிவிப்பாக 3000 ரூபாய் நிதி அளிக்கப்படும் என விரைவில் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அதிரடி அறிவிப்புகளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் வெளியிட்டதில்லை எனக் கூறப்படுகிறது.     

click me!