60 லட்சம் குடும்பங்களுக்கு நிதி ரூ.2000... அடுத்தடுத்து அசரடிக்கும் எடப்பாடி..!

Published : Feb 11, 2019, 12:09 PM ISTUpdated : Feb 11, 2019, 01:11 PM IST
60 லட்சம் குடும்பங்களுக்கு நிதி ரூ.2000... அடுத்தடுத்து அசரடிக்கும் எடப்பாடி..!

சுருக்கம்

தமிழகத்தில் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2000 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறித்துள்ளார்.

தமிழகத்தில் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2000 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் அறிவித்துள்ள இந்தத் திட்டத்தில், ‘’கஜா புயல் தாக்கத்தாலும், பருவமழை பொய்த்ததாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவவசாயிகள், நகர்ப்புற ஏழைகள்,  பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி, விசைத்தறி, கைத்தறி உப்பள தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை தொழிலாளர்கள் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

கிராமப் பகுதிகளில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்புறங்களில் வாழும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் இதற்காக 1200 கோடி ரூபாய் 2018- 19 துணை மாணியக் கோரிக்கை நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுகளுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கி அசத்தினார் எடப்பாடி. இந்நிலையில் 2000 ஆயிரம் சிறப்பு உதவித் தொகையை அறிவித்து பொதுமக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.    

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!