எடப்பாடிக்கு பின்னால் அமர்ந்த அழகிரி... ரஜினி வீட்டு கல்யாண பரபரப்பு!!

By sathish kFirst Published Feb 11, 2019, 12:28 PM IST
Highlights

ரஜினி மகள் கல்யாணத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் முன் வரிசையிலும் தனது நண்பன் அழகிரியை பின் வரிசையிலும் அமர்ந்திருக்கிறார் ரஜினி.

கல்யாணத்திற்கு விவிஐபிகளை ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் பத்திரிகை வைத்தார். இதையடுத்து அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.  அதேபோல தனது நண்பன் அழகிரியை சந்தித்து பத்திரிக்கை வைத்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கி விட்டது.

ரஜினியின் இரண்டாவது மகள் கல்யாணம் விழா இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில்  நடைபெற்றது. 

ரஜினியின் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என முக்கிய பிரபலங்கள் ஏராளமானோர்   இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தங்கமணி ஆகியோருடன் வந்திருந்தார். கொஞ்சம் லேட்டாக துணைமுதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதேபோல், தனது நண்பனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதியோடு வந்திருந்தார். மணமக்களை வாழ்த்திய அவர் எட்டப்படிக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்தார். முதல் வரிசையில் முதல் வரிசையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு பின்னால் அழகிரி அமர்ந்திருந்தார். 

தனது நண்பனை முன்வரிசையில் அமரவைப்பார் ஏப் பார்த்தால் இப்படி பின் வரிசையில் அமரவைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறாரே என அழகிரி ஆதரவாளர்கள் ரஜினி மீது கடும் கோபத்தில் உள்ளனர். கல்யாண வீடுன்னா அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும் அதுக்காக சங்கடப்பட்டு எப்படி என மனசை தேற்றிக் கொள்கின்றனர்.

click me!