உலக அளவில் கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட நாடு எது தெரியுமா..?

Published : Oct 02, 2021, 05:33 PM IST
உலக அளவில் கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்ட நாடு எது தெரியுமா..?

சுருக்கம்

உலகம் முழுக்க இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.37 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுக்க இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.37 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.45 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.98 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.37 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.71 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதுவரை 622.2 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகளில் சீனா - 222.9 கோடி, இந்தியா - 88.15 கோடி, ஐரோப்பா ஒன்றியம் -67 கோடி, அமெரிக்கா - 47.6 கோடி, பிரேசில் - 21.07 கோடி. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 622 கோடியை தொட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!