மத்திய அமைச்சர் எல்.முருகன் எந்த மாநிலத்தில் இருந்து எம்.பி.,யாகிறார் தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Thiraviaraj RMFirst Published Sep 18, 2021, 11:22 AM IST
Highlights

மீன்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக உள்ளார் எல்.முருகன். அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வாகிறார். மத்திய இணையமைச்சராக பதவியேற்ற நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வாகிறார்.

அண்மையில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன். எம்.பி அல்லாமல் ஒரு அமைச்சரால் 6 மாதம் மட்டுமே பதவியில் நீட்டிக்க முடியும். இந்நிலையில், எல் முருகன் புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகலாம் எனக்கூறப்பட்டது. ஆனால், என்.ஆர் காங்கிரஸ் அதற்கு உடன்படவில்லை. ஆகையால் எல்.முருகன் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

click me!