நீட் தேர்வால் விபரீதம்... நாமக்கல் மாணவி என்ன ஆனார் தெரியுமா..?

By Thiraviaraj RMFirst Published Sep 18, 2021, 10:56 AM IST
Highlights

நீட் தேர்வு அச்சத்தால் மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே மாணவி சோகமாக காணப்பட்ட மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நீட் தேர்வு அச்சத்தால் மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே மாணவி சோகமாக காணப்பட்ட மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த செந்தில் பாண்டியன்- தங்கம் தம்பதியினரின் மகள்சுவேதா. வருக்கு வயது 19. சுவேதா ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி நீட் தேர்வு மையத்தில் ஓராண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.

கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அவர் நீட் தேர்வு எழுதினார். தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே சுவேதா சோகமாக இருந்துள்ளார். அப்போது, சுவேதாவுக்கு அவரது உறவினர்களும், தாய், தந்தையும் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

 

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சுவேதாவின் தோழியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இரவு வரை சுவேதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. 
இதுகுறித்து சுவேதாவின் பெற்றோர் நேற்று இரவு நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

click me!