பான், ஆதார் இணைப்பு… மீண்டும் ‘டைம்’ கொடுத்த மத்திய அரசு!!

Published : Sep 18, 2021, 10:47 AM IST
பான், ஆதார் இணைப்பு… மீண்டும் ‘டைம்’ கொடுத்த மத்திய அரசு!!

சுருக்கம்

டெல்லி: பான்கார்டு, ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.  

டெல்லி: பான்கார்டு, ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.

நாட்டில் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும், பான், ஆதார் அட்டை விவரங்கள் கேட்கப்படுகின்றன. பான் எண்ணையும், ஆதார் அட்டை எண்ணையும் இணைக்கும் கடைசி நாள் வரும் 30ம் தேதி என்று வருமானவரித்துறை அறிவித்து இருந்தது.

ஆனால், கொரோனா காலக்கட்டத்தில் இந்த காலக்கெடுவை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வருமானவரித்துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதனை பரிசீலித்த வருமானவரித்துறை பான், ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடுவை மீண்டும் ஒரு முறை நீட்டித்துள்ளது.
அதன்படி, பான் எண், ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துள்ள வருமானவரித்துறை உத்தரவிட்டு உள்ளது. பான், ஆதார் எண் இணைப்பு இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!