ஓசி பிரியாணிக்காக ரவுடியிசம் செய்யும் கட்சி தேவையா..? கட்டப்பஞ்சாயத்து செய்தும் தலைவர் தேவையா. இபிஎஸ் கேள்வி.

By Ezhilarasan BabuFirst Published Feb 23, 2021, 11:04 AM IST
Highlights

ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். தப்பு செய்தவர்களை தட்டிக் கேட்டால் அவர் உண்மையான தலைவர், கட்டப்பஞ்சாயத்து செய்கிற தலைவர் நாட்டுக்கு தேவையா.? 

அராஜகம் செய்யும் திமுகவும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவரும் நாட்டுக்கு தேவை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:  திமுக என்றாலே அராஜக கட்சி, ரவுடி கட்சி , திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு பெண்ணை கட்சியின் மாவட்ட செயலாளர் தாக்குகிறார். 

அந்தப் பெண் கதறுகின்ற காட்சியை நாம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்தோம், ரயிலில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பெண்ணிடம் திமுக ஒன்றிய செயலாளர் தகாத முறையில் நடக்க முயற்சி செய்கிறார், அந்தப் பெண் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இன்றைக்கு அந்த நபர் கைது செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். தப்பு செய்தவர்களை தட்டிக் கேட்டால் அவர் உண்மையான தலைவர், கட்டப்பஞ்சாயத்து செய்கிற தலைவர் நாட்டுக்கு தேவையா.? இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க சிறந்த மாநிலம் தமிழகம் என நாளிதழ்களில் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது, நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன், சட்டத்தின் ஆட்சி தமிழகத்திலேயே நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மிக முக்கியமானது, அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னர் நாம் சந்திக்கின்ற முதல் தேர்தல். இந்தியாவிலேயே முதல் முறையாக அதிமுக தான் பெண்களை கொண்ட பூத் கமிட்டி அமைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் எந்த கட்சியிலும் கிடையாது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கட்சி அதிமுக தான், நம் கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் தலா 10 ஓட்டுவது சேகரிக்க வேண்டும், அம்மாவின் ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!