சைலன்ட் மோடில் பிரேமலதா..! அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!

By Selva KathirFirst Published Feb 23, 2021, 10:40 AM IST
Highlights

இதுவரை எப்போதும் இல்லாத வகையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காத்திருந்த தேமுதிகவுடன் ஒரு வழியாக அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

இதுவரை எப்போதும் இல்லாத வகையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காத்திருந்த தேமுதிகவுடன் ஒரு வழியாகஅதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

முதலில் பாஜக, பிறகு பாமக, அதன் பிறகு இதர கட்சிகள் என்று கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஏற்கனவே அதிமுக திட்டமிட்டு வைத்திருந்தது. பாஜகவை அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்க வைக்கவே அதிமுக மேலிடம் மூன்று மாதங்கள் போராட வேண்டியிருந்தது. இதன் பிறகு டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு 21 தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட்டது. இதன் பிறகே பாமகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இறுதியில் 31 தொகுதிகளுக்கு பாமக ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற விஷயங்கள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிகவுடன் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். எல்.கே.சுதீஷ் நேரடியாக அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிகவிற்கு ஒதுக்கிய 41 தொகுதிகள் என்று சுதீஷ் பேச்சுவார்த்தையை தொடங்க. அது 2011 இது 2021 என்று பதில் அளித்துள்ளனர் அதிமுக நிர்வாகிகள்.

தேமுதிகவின் வாக்கு வங்கி என்று பார்த்தால் 2 முதல் 3 சதவீதம் மட்டுமே என்று அதிமுக தரப்பில் இருந்து ஒரு கணக்கை கூறியுள்ளனர். ஆனால் இதனை மறுத்துள்ள சுதீஷ் தங்கள் கட்சியின் தொண்டர்களின் எண்ணிக்கையை 50 லட்சத்தை தாண்டும் என்று ஒரு கணக்கை கூறியுள்ளார். ஆனால் அதெல்லாம் அப்போது இப்போது இல்லை என்று தெரிவித்த அதிமுக தரப்பு கூட்டணியில் 9 தொகுதிகளை வழங்க தயார் என்று கூறியுள்ளது. இதனை எதிர்பார்த்து காத்திருந்த சுதீஷ் இரட்டை இலக்கங்களில் தேமுதிகவிற்கு தொகுதி வேண்டும். பாமகவை போல் தாங்கள் குறிப்பிட்ட ஏரியா கட்சியில்லை.

தமிழகம் முழுவதும் தங்களுக்கு அமைப்புகள் உள்ளன என்று பேச ஆரம்பித்துள்ளார். இதன் பிறகு பேச்சுவார்த்தை முற்று பெறாமல் முடிந்துள்ளது. தொடர்ந்து செல்போன் வாயிலாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக சார்பில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது. அதில் வைத்தே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் அதிமுக தரப்பில் தங்களுக்கு வெறும் 9 தொகுதிகள் என்று கூறியது பிரேமலதாவை டென்சன் ஆக்கியதாக கூறுகிறார்கள். தற்போதைய சூழலில் தேமுதிகவிற்கு பெரிய அளவில் வேறு வாய்ப்புகள் இல்லை. அதிமுக மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி இருக்கும் வாய்ப்பு.

திமுகவுடன் கூட்டணி பேசினால் அங்‘கும் இதே 9 தொகுதிகள் என்கிற ரீதியில் தான் ஆரம்பிப்பார்கள் என்று பிரேமலதாவிற்கு தெரியும். அத்தோடு மூன்றாவது அணி அமைத்தால் தற்போது இருக்கும் நிர்வாகிகளும் திமுகவிற்கு ஓடிவிடுவார்கள் என்பதையும் பிரேமலதா உணர்ந்தே வைத்துள்ளார். எனவே தற்போது அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க சைலன்ட் மோடுக்கு பிரேமலதா சென்றுள்ளார். 

click me!