ஈகோவை விட்டுவிட்டு இதை மட்டும் செய்யுங்கள்.. பாஜகவை அசால்டா வீழ்த்தலாம்.. திமிரும் திருமா.!

By vinoth kumarFirst Published Mar 14, 2022, 11:08 AM IST
Highlights

பாஜக  வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்து நின்றதே ஆகும். அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு போட்டியிட்டு இருந்தால் பாஜக வெற்றி பெற்று இருக்காது.

பாஜக  வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்து நின்றதே காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும்

இதுதொடர்பாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்;- பாஜக உத்தரபிரதேசத்தில் கடந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது ஆட்சியை பிடித்திருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாஜக  வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்து நின்றதே ஆகும். அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு போட்டியிட்டு இருந்தால் பாஜக வெற்றி பெற்று இருக்காது. எனவே பாஜக தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் தங்கள் ஈகோவை விட்டு விட்டு ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் பாஜகவை வீழ்த்த முடியும்.

இதையும் படிங்க;- இது மோடி அரசின் அப்பட்டமான தமிழர் விரோத நிலைபாடு.. சட்டத்துக்குப் புறம்பானது.. கொதிக்கும் திருமா.!

உத்தரப்பிரதேம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அவர்கள் பேசவில்லை. மாறாக ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் எழுப்புவது, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பது என்று மக்களின் மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இது மிகவும் ஆபத்தான அரசியல்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது

இந்தியாவை சூழ்ந்திருக்கும் இந்த ஆபத்தை எதிர்கொள்ளவும், விரட்டி அடிக்கவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள முன்வர வேண்டும். எந்த கட்சி தலைமையேற்பது, யார் பிரதமர் என்பதைவிட அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற அவசியம் இருப்பதை எதிர்கட்சிகள் உணர வேண்டும். 4 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன. எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அதை தடுத்தாக வேண்டும். 

ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பானது ஆணவ கொலைகளை தடுப்பதற்கு வழிவகுக்கும். இந்த வழக்கில் போராடிய வழக்கறிஞர் மோகனுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நாங்கள் ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்றம் வேண்டும் என பல நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  இந்தியாவுக்கு ஆபத்து.. தமிழகத்தை குறிவைத்து விட்டார்கள்.. பாஜகவை பார்த்து அலறி துடிக்கும் திருமாவளவன்.

click me!