சொந்த கட்சியினருக்கே மிரட்டல்.. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது.. உயர்நீதிமன்றம்.!

By vinoth kumarFirst Published Oct 8, 2021, 6:43 PM IST
Highlights

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டமர் 24ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதிமுக மாவட்டச் செயலாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டமர் 24ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற்றதால், இவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

click me!