100 பாஜக வந்தாலும் எங்களை அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு சேகர் பாபு பதிலடி..!

Published : Oct 08, 2021, 06:10 PM IST
100 பாஜக வந்தாலும் எங்களை அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு சேகர் பாபு பதிலடி..!

சுருக்கம்

பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.  

பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. பத்து நாட்களில் கோவில்களை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணையவழியில் வாடகை செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘’பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது. 

மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஆணைப்படி தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே போராட்டம் நடத்துபவர்கள் மத்திய அரசிடம் இருந்து, திருவிழாக்களுக்கு அனுமதி, போராட்டம் நடத்த அனுமதி என கடிதம் வாங்கி கொடுத்தால் அதனை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது’என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!