எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் பாஜகவுக்கு வரவில்லை.. பெண்கள் இதை செய்யுங்கள், குஷ்பு எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2021, 5:45 PM IST
Highlights

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியம் ஆனவர் நடிகை குஷ்பு, அப்போது அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். பின்னர் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் நாகநாதனை எதிர்த்துப் போட்டியிட்ட அவர் அதில் தோல்வி அடைந்தார்

.

எந்தப் பதவியையும் எதிர்பார்த்து பாஜகவில் தான் சேரவில்லை என்றும், பாஜக, காங்கிரசார் என யாராக இருந்தாலும் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது தனது 51 வயது ஆகிறது என்றும், 35 வயதிலேயே அதற்கான பரிசோதனையை தான் செய்து கொண்டதாகவும் குஷ்பு கூறினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியம் ஆனவர் நடிகை குஷ்பு, அப்போது அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். பின்னர் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் நாகநாதனை எதிர்த்துப் போட்டியிட்ட அவர் அதில் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து பெரிய அளவில் அரசுயில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த அவர், சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் மீது பாஜக அமைச்சர் மகன்  கார் ஏற்றி  கொன்ற விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராகவே தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். உலகில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், நடிகை குஷ்புவுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி, செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு.. வாரி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற "உங்களுக்கான மார்பகப் பரிசோதனை செய்யும் சிறந்த சோதனையாளர் நீங்களே" என்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார திட்டம் தொடங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வேண்டும், வீட்டில் உள்ள பெண்களிடம் மார்பக பரிசோதனை செய்து கொள்ள ஆண்கள் வலியுறுத்த வேண்டும் என்றார். புற்றுநோய் கட்டுப்படுத்தக் கூடிய நோய்தான், எனக்கு 51 வயது ஆகிறது 35 வயதில் நான் எனக்கான  பரிசோதனை செய்து கொண்டேன் என்றார்.

இதையும் படியுங்கள்: நிலக்கரி காணாமல் போன விவகாரம்.. அறிக்கை வந்தவுடன் ஆட்டம் ஆரம்பம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி.

அனைவரிடமும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும், அதற்கான அறிகுறி உள்ள ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார், பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், ஆனால் பாஜகவில் எந்த பொறுப்பும் எதிர்பார்த்து இணையவில்லை என்றும் அவர் கூறினார். பாஜகவினர் காங்கிரசார் என அனைத்து கட்சியினரும் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
 

click me!