மக்களுக்காக உழைத்த காமராஜருக்கு சிலை அமைக்க கூடாதா.. திடீர் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்.

Published : Feb 27, 2021, 01:47 PM IST
மக்களுக்காக உழைத்த காமராஜருக்கு சிலை அமைக்க கூடாதா..  திடீர் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்.

சுருக்கம்

அதன்படி அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவரும் பரிந்துரை கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். மேலும் சிலை அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகளையும் அப்பகுதி மக்கள் மேற்கொண்டு முடித்துள்ளனர்.  

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் புதிதாக  காமராஜர் சிலை அமைக்க அனுமதி மறுத்த தமிழக அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் சிலை அமைய இருக்கும் பீடத்தின் மீது அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  சார்பாக பெருந்தலைவர் காமராஜருக்கு 2019 ல் புதிதாக சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.  

அதன்படி அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவரும் பரிந்துரை கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார். மேலும் சிலை அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகளையும் அப்பகுதி மக்கள் மேற்கொண்டு முடித்துள்ளனர். தற்போது சிலையை நிறுவுவது மட்டுமே பாக்கியுள்ளது. இந்நிலையில்  இன்று வரை தமிழக அரசு இதற்கு முறையான அனுமதி வழங்கவில்லை என்றும், பல்வேறு காரணங்களை கூறி அலக்கழித்து வருவதாகவும் கூறிய அப்பகுதி மக்கள், போராட்டத்தில் குதித்தனர். 

 

தமிழக மக்களுக்காக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகத்தில் சிலை வைக்க அனுமதி மறுத்து வரும் தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக அனுமதி வழங்ககோரியும் இன்று இறச்சகுளம் மக்கள் புதிதாக காமராஜர் சிலை அமைய இருக்கும் பீடத்தை சுற்றி அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் அனுமதி மறுக்கப்பட்டால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் எனவும் தமிழக அரசுக்கு  எச்சரிக்கை விடுத்தார்கள்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!