மதிப்பிற்கு உரிய அரசியல்வாதிகளே..! ஸ்டாலினுக்கு ரஜினி கூறிய சீரியஸ் அட்வைஸ்..!

By vinoth kumarFirst Published Aug 15, 2019, 5:39 PM IST
Highlights

இதை எல்லாமே அரசியல் ஆக்குவீர்கள் என்று அரசியல்வாதிகளை பார்த்து கேட்பது மாதிரி ரஜினி கேட்டது ஸ்டாலினிடம் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதை எல்லாமே அரசியல் ஆக்குவீர்கள் என்று அரசியல்வாதிகளை பார்த்து கேட்பது மாதிரி ரஜினி கேட்டது ஸ்டாலினிடம் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கூட காட்டாத எதிர்ப்பை திமுக காட்டி வருகிறது. நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரிப்பு மசோதா நிறைவேறிய நிலையில் அதன் பிறகு அந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தலைமுழுகிவிட்டது. ராகுல் காந்தியும் கூட காஷ்மீர் நிலரவம் குறித்து தான் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார். மாநில பிரிவினைக்கு எதிராக பெரிய அளவில் எதையும் கூறவில்லை. 

ஆனால், தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். யாரும் எதிர்பாராத வகையில் தோழமை கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதோடு இல்லாமல் அனைத்து கட்சி குழுவை காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த அளவிற்கு ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்தில் தீவிரம் காட்டியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

ஆனால், இந்த விவகாரத்தின் மூலமாக இழந்த முஸ்லீம் வாக்கு வங்கியை மீண்டும் பெற ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார். வாணியம்பாடியில் கிடைத்த நம்பிக்கையை வீணாக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசை மிகத் தீவிரமாக எதிர்க்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் ரஜினி பேசினார். அப்போது அமித் ஷா – மோடியை அர்ஜூனன் கிருஷ்ணருடன் ஒப்பிட்டது குறித்து பலரும் விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த ரஜினி, காஷ்மீர் தீவிரவாதிகளின் தாய் வீடு போல் இருப்பதாகவும், இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் கேட் வே ஆப் இந்தியாவாக காஷ்மீர் இருப்பதாகவும் ரஜினி தெரிவித்தார். அந்த வகையில் காஷ்மீரை மத்திய அரசு நேரடியாக கட்டுப்பாட்டில் எடுப்பதால் அது தேச பாதுகாப்பு தொடர்புடையது என்று ரஜினி தெரிவித்தார். 

அத்தோடு மரியாதைக்கு உரிய அரசியல்வாதிகள் சிலர் காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றார். மேலும் இந்த விவகாரத்தை கூடவா அரசியல் ஆக்குவீர்கள் என்றும் ரஜினி கேள்வி எழுப்பினார். இப்படி ரஜினி எழுப்பிய கேள்வி ஸ்டாலினை நோக்கியது தான் என்பது இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்.

click me!