2021 சட்டப்பேரவை தேர்தலில் ரஜினியுடன் கூட்டணியா...? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Aug 15, 2019, 5:25 PM IST
Highlights

காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து கூடாது என்பதை ஜெயலலிதா நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் நல்ல கருத்தைத் தான் கூறியுள்ளார். இது தைரியமான எல்லோரும் பாரட்டக்கூடிய முடிவு. ரஜினிகாந்துடன் கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தலைமை முடிவு செய்யவேண்டிய விஷயம் என்றார்.

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் பொது விருந்தில் கலந்துகொண்டு அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது நிர்வாக வசதிக்காகவே. மாவட்டங்கள் பிரிக்கப்படுவது மக்களுக்கு நல்ல விசயம். செவிகொடுத்து கேட்டு செவிசாய்க்கும் அரசு தமிழகத்தில் உள்ளது. அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அ.தி.மு.க தான் ஆட்சியில் இருக்கும். தி.மு.கவின் நினைப்பு பகல் கனவாகி வருகின்றது. 
 
காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து கூடாது என்பதை ஜெயலலிதா நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் நல்ல கருத்தைத் தான் கூறியுள்ளார். இது தைரியமான எல்லோரும் பாரட்டக்கூடிய முடிவு. ரஜினிகாந்துடன் கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தலைமை முடிவு செய்யவேண்டிய விஷயம் என்றார். 

கடப்பாரையை சாப்பிட்டு விட்டு சுக்கு கசாயம் சாப்பிடுவது திமுகதான், நீட் விவகாரத்துக்காக சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் இந்த பதிலை அளித்துள்ளார். மேலும், சாதிகள் இல்லை என்பதே அரசின் நிலை. பள்ளிக்கல்வியின் சுற்றறிக்கையை கனிமொழி வரவேற்றது நல்ல விஷயம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

click me!