ஃப்ளைட்டில் வைத்தே காரியம் சாதிக்க நினைத்த அமைச்சர்கள்... ரூட்டை மாற்றிய எடப்பாடி..!

Published : Aug 15, 2019, 04:32 PM IST
ஃப்ளைட்டில் வைத்தே காரியம் சாதிக்க நினைத்த அமைச்சர்கள்... ரூட்டை மாற்றிய எடப்பாடி..!

சுருக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணித்தால் அந்த நேரத்தில் அவரை சமாதானப்படுத்தி விடலாம் எனக் கணக்குபோட்டு வைத்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள். ஆனால், அதற்கெல்லாம் இடம் கொடுக்கக்கூடாது என பக்காவாக ப்ளான் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28-ம் தேதி அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். 

அவரோடு இந்த பயணத்தில் சில அமைச்சர்களும் இடம் பிடித்து இருக்கிறார்கள். அவர்கள் மொத்தமாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் வெளிநாடு செல்லக் காத்திருக்கிறார்கள். தகவல் தொழில் நுட்ப அமைச்சராக இருந்து தூக்கியடிக்கப்பட்ட மணிகண்டன் பதவி நீக்கத்துக்கு பிறகு சில அமைச்சர்களையும் மாற்றப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணித்தால் அந்த நேரத்தில் அவரை சமாதானப்படுத்தி விடலாம் எனக் கணக்குபோட்டு வைத்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள். 

ஆனால், அதற்கெல்லாம் இடம் கொடுக்கக்கூடாது என பக்காவாக ப்ளான் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  
அமைச்சர்கள், தங்கள் துறை செயலர்களோடு முதல்வர் இருக்கிற நாட்டுக்கு, தனித்தனியாக வந்து சேரும் வகையில் திட்டம் போட்டுக் கொடுத்து விட்டார் என்கிறார்கள். ஆக அமைச்சர்கள் போட்ட திட்டம் பணாலாகி விட்டது.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!