ரஜினி, கமலோட ஆதரவுலாம் தேவையில்லை.. நானே ஜெயிச்சுடுவேன்..! விஷால் நம்பிக்கை..!

 
Published : Dec 04, 2017, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ரஜினி, கமலோட ஆதரவுலாம் தேவையில்லை.. நானே ஜெயிச்சுடுவேன்..! விஷால் நம்பிக்கை..!

சுருக்கம்

do not need rajini and kamal support said vishal

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களின் தைரியத்தை நம்பித்தான் போட்டியிடுகிறேன். அதனால், ரஜினி, கமல் ஆகியோரின் ஆதரவை நாடமாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் விஷால், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். அதற்கு முன்னதாக சென்னை திநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்திற்கு சென்று காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆரின் வீட்டில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் அரசியல்வாதி அல்ல. மக்கள் பிரதிநிதியாகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். எனக்கு பின்னால் யாரும் கிடையாது. யாருடைய வாக்கு வங்கியையும் பிரிப்பதற்காக நான் தேர்தலில் நிற்கவில்லை. 

ஆர்.கே.நகரில் உள்ள அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். எனவே மக்களின் தைரியத்தை அடிப்படையாகக் கொண்டு நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். அதனால், ரஜினி, கமல் ஆகியோரின் உதவிகளை நாடமாட்டேன் என விஷால் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, விஷால் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!