
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வுடன் எந்த சவகாசமும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ரஜினியை தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. டார்ஜிலிங்கில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி சென்னை திரும்பிய உடன் இரண்டு பேரை அழைத்தார். ஒருவர் தனது நண்பர் தமிழருவி மணியன். மற்றொருவர் ரஜினி மக்கள் மன்றத்தின் அவைத்தலைவர் இளவரசன். இவர்களில் தமிழருவி மணியனை காலை எட்டு மணிக்கெல்லாம் தனது வீட்டுக்கு வரவழைத்து பேசியுள்ளார் ரஜினி. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்று ரஜினி தமிழருவியிடம் கேட்டுள்ளார்.