
அமித் ஷா சென்னைக்கு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவரது டீமில் இருந்து நான்கு பேர் சென்னைக்கு வந்துவிட்டனர். ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்த அவர்கள், தமிழக அரசியல் அக்கு அக்காக பிரித்து மேய்ந்து ஒரு அசல் ரிப்போர்ட் தயாரித்துள்ளார்கள் சீக்ரெட் டீம்.
அதில் ‘ஆட்சியில் இருக்கும் அதிமுக நம் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கே எடப்பாடி சொல்வதையே கேட்கும் நிலையில் அமைச்சர்கள் இல்லை. ஒவ்வொருவரும் கல்லாக் கட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அமைச்சர்கள் வீட்டுக்கு ரெய்டு போனால்கூட அத்தனை பேரும் சிக்குவார்கள் என அந்த ரிபோர்டில் பல ஷாக் தகவல்கள் இருந்துள்ளது.
“அமித் ஷா வருகைக்கு முன்பாக சென்னைக்கு வந்த டீம், அவர் டெல்லி திரும்பிய பிறகும் இன்னும் சென்னையில்தான் இருக்கிறது. ’தமிழ்நாட்டில் எந்த அமைச்சர்கள் எல்லாம் ஊழலில் அதிகம் சம்பாதிச்சுட்டு இருக்காங்க என கேட்ட அமித் ஷா, டாப் 5 மினிஸ்டர்ஸ் லிஸ்ட் எனக்கு வேணும்..’ என சென்னையில் இருந்து கிளம்பும் போது அந்த சீக்ரெட் டீம்க்கு அசைன்மெண்ட் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
அவர்களும் அமைச்சர்களின் சொத்து விவரங்களை தோண்ட ஆரம்பித்துவிட்டனர். கோவைக்கு விரைந்திருக்கும் அந்த சீக்ரெட் டீம், கொங்கு மண்டலத்தில் இருந்தே விசாரணையை ஆரம்பித்திருக்கிறது.
அமைச்சர்கள் சொத்து விபரங்களைத்தான் முதலில் மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளது அந்த சீக்ரெட் டீம்.
முதலில் இவர்களது அசையும் அசையா சொத்துக்கள் என விபரங்கள், வரவு- செலவுகளை கண்காணித்து ஒரு ரிப்போர்ட் ரெடியாகிறதாம். அதன் பிறகு ஒவ்வொரு அமைச்சராக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப் போகிறார்களாம். டெல்லியோடு நெருக்கம் காட்டி வரும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவரும் இந்த ஆபரேஷனுக்கு உதவி செய்து வருகிறாராம்.
இந்நிலையில், ஊழலில் ஊறிப்போன முதல் 5 மாண்புமிகுக்களின் ஊழல் பட்டியல் அமித் ஷாவிடம் ஆதாரங்களோடு வந்ததும் அடுத்த ஆபரேஷன் ஸ்டார்ட் ஆகுமாம்!