கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம். அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன்மூலம் ஆதாயம் தேடும் ஈனத்தனமான செயல்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும் கேப்டன் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் படிக்க:அமைதியான போராட்டத்தில் திமுக அரசின் அடக்குமுறை.. விடியா அரசே! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
இனிமேல் இது போன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம். அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன்மூலம் ஆதாயம் தேடும் ஈனத்தனமான செயல்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் சொந்த ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வருந்ததக்க விஷயம். இனி இது போன்ற கீழ்த்தரமான விஷமத்தனமான அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். கேப்டன் உடல் நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது இறுதியானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மருத்துவமனையிலிருந்து திரும்பிய விஜயகாந்த்..உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா?
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்தது. சினிமாவில் நடிகராக கால்பதித்து அரசியலில் எதிர்க்கட்சி தலைகர் அந்தஸ்து வரை உயர்ந்த விஜயகாந்த திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்தே ஒதுக்கி இருக்கிறார்.
மேலும் படிக்க:விஜயகாந்த் காலில் 3 விரல்கள் நீக்கம்.. தேமுதிக அதிகாரபூர்வ அறிவிப்பு.. அலறி துடிக்கும் கேப்டன் விசுவாசிகள்.
மேலும் பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காகவும், சில நேரங்களில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது காலில் சீரான ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் அதன் அடிப்படையில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைதொடர்ந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் பரவி வந்த நிலையில், தேமுதிக தலைமைக் கழகம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அறிக்கையில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.