அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்த குறித்த முக்கிய தகவல்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக.!

By vinoth kumarFirst Published Jul 20, 2021, 11:42 AM IST
Highlights

கழக அவைதலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம். தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் என தெரிவித்துள்ளது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர், வயது மூப்பு காரணமாக  மதுசூதனன் அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மதுசூதனனுக்கு கடந்த 18ம் தேதி திடீரென மூச்சத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக டுவிட்டர் பக்கத்தில்;- கழக அவைதலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம். தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் என தெரிவித்துள்ளது. எனவே மதுசூதனனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்பதை யாரும் நம்ப வேண்டாம் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

click me!