முன்னாள் எம்எல்ஏ உள்பட 10 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்., ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jul 20, 2021, 11:10 AM IST
Highlights

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடுவோர், திமுகவினருடன் இணைந்து செயல்படுவோர் என பலரையும், அதிமுகவில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நீக்கி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடுவோர், திமுகவினருடன் இணைந்து செயல்படுவோர் என பலரையும், அதிமுகவில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நீக்கி வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ உட்பட 10 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்ளை குறிக்கோள்களுக்கும்  கோட்டுபாடுகளுக்கும் முரணான  வகையில்செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக  கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மாவட்ட துணைச்செயலாளரும் நாகர்கோவில தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ராஜன், இணைச் செயலாளர் டி.லதா ராமச்சந்திரன், தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் எஸ்.கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயலாளர் எஸ்.மாடசாமி, தோவாளை தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் பி.மோசஸ் ராமச்சந்திரன், வடக்கு ஒன்றியபொருளாளர் ஆர்.தென்கரை மகாராஜன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், தோவாளை வடக்கு மாவட்ட பிரதிநிதி எஸ்.ஜெயந்தி ஆகியோரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜி.நாஞ்சில் டோமினிக், பாசறை இணைச் செயலாளர் எம்.வரதராஜன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். இவர்களுடன் கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளனர். 

click me!